வெற்றிப்பட இயக்குனர் சி.வி. ஸ்ரீதரின் இயக்கத்தில் ரவிச்சந்திரன், முத்துராமன், டி.எஸ். பாலையா, நாகேஷ், காஞ்சனா, ராஜஸ்ரீ, வி.எஸ். ராகவன், குமாரி சச்சு மற்றும் பலர் திறம்பட நடித்து 1964ஆம் ஆண்டு வெளிவந்த முழுநீள நகைச்சுவைப் படம் காதலிக்க நேரமில்லை.
தொடக்கத்திலிருந்து முடிவு வரை ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்து அவர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது இப்படம். எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையானவை. இத்திரைப்படம் கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஆளியார் அணை, அதைச் சேர்ந்த விருந்தினர் மாளிகை, பூங்காக்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் கண்ணுக்கினிய குளு குளு கலரில்
படமாக்கப் பட்டுள்ளது.
சென்னையில் வாழும் ஒரு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகனான அசோக் (ரவிச்சந்திரன் - இப்படத்தில் தான் இவர் அறிமுகமானார்). கோவை ஜில்லாவிலுள்ள சின்னமலை எஸ்டேட்டில் மேனேஜர் வேலை கிடைத்து ஒரு ஹைதர் அலி காலத்து ஓட்டைக் காரை விலைக்கு வாங்கிக்கொண்டு சின்னமலை எஸ்டேட்டில் செட்டில் ஆகிறார்.
எஸ்டேட் முதலாளி விஸ்வநாதன் (டி.எஸ். பாலையா) அவர்களுக்கு செல்லப்பா (நாகேஷ்) எனும் ஒரு மகன், காஞ்சனா (காஞ்சனா), நிர்மலா (ராஜஸ்ரீ) எனும் இரு மகள்கள். அசோக்கின் நண்பன் வாசு (முத்துராமன்). வாசுவின் தந்தை சிதம்பரம் (வி.எஸ். ராகவன்) ஒரு செல்வந்தர். பாலையாவின் எஸ்டேட் அஸிஸ்டண்ட் மேனேஜரின் மகள் மீனா (சச்சு).
முத்துராமனும் காஞ்சனாவும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.
இவர்களிருவரும் கதையின் ஆரம்பத்தில் பாடி ஆடுவதாக அமைந்த கே.ஜே. ஜேசுதாஸும் பி. சுசீலாவும் பாடும் "என்ன பார்வை உந்தன் பார்வை" எனும் பாடல் இடம் பெறுகிறது.
நாகேஷ் திரைப்படம் தயாரிக்கும் ஆர்வத்தில் "ஓஹோ புரொடக்ஷன்ஸ்" எனும் பெயர் வைத்துக்கொண்டு தன் தந்தையிடம் படமெடுக்கப் பணம் கேட்டு நச்சரித்துக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் உலாவப் போகும் வழியில் சச்சுவைப் பார்த்ததும் அவரைத் தன் படத்துக்குக் கதாநாயகியாகத் தேர்வு செய்து 101 ரூபாய் அட்வான்ஸும் கொடுக்கிறார்.
ரவிச்சந்திரனுக்கும் ராஜஸ்ரீக்கும் இடையே சந்தர்ப்பவசமாக மோதல் உருவாகி அதனால் பாலையா அவரை வேலையை விட்டு நீக்கி விடுகிறார். பின்னர் ரவிச்சந்திரன் பாலையாவின் வீட்டிற்கெதிரே ஒரு சிறு கூடாரம் (tent) அமைத்து அதிலிருந்துகொண்டு ஒரு "பாண்ட்" வாத்தியக் கோஷ்டியை வருவித்து அவர்களுடன் சேர்ந்து "மாடி மேலே மாடி கட்டி கோடி கோடி சேர்த்து வைத்த சீமானே.. விஸ்வநாதன், வேலை வேணும்" என்ற பி.பி. ஸ்ரீனிவஸின் பாடலைப் பாடி ஆடும் பொழுது ராஜஸ்ரீ பால்கனியிலிருந்து ஒரு வாளியை அவரது தலையில் போட, மிகப்பெரிய காயம் பட்டது போல் நடித்து ராஜஸ்ரீயின் காதலைப் பெறுகிறார். இந்தப் பாடலுக்கு நடனம் மிக அற்புதமாக இருக்கும்.
பாலையா தன் பெண்களைக் கல்யாணம் செய்து கொடுக்கும் இடம் தன்னைவிட செல்வச் செழிப்புள்ள இடமாக இருக்க வேண்டும் எனும் பிடிவாத குணமுள்ளவர். தன் காதலை வெற்றி பெறச் செய்ய ரவிச்சந்திரன் தன் நண்பனின் உதவியை நாடுகிறார். முத்துராமன் நண்பனுக்கு உதவுவதற்காகத் தன் தந்தையிடம் தான் வியாபார விஷயமாகக் கோவை செல்ல விரும்புவதாகக் கூறித் தன் தந்தையின் பெரிய காரை எடுத்துக் கொண்டு கிழவன் வேஷம் போட்டுக் கொண்டு சின்னமலை எஸ்டேட் சென்று பாலையாவைச் சந்தித்து தான் ஒரு கப்பல் கம்பெனியின் முதலாளி என்றும் ரவிச்சந்திரன் தன் மகன் என்றும் கூறுகிறார். பாலையா அதை உண்மை என்று நம்பி முத்துராமனைத் தன் பங்களாவில் சில தினங்கள் தங்கும்படி வேண்டுகிறார்.
முத்துராமனும் அவ்வாறே தங்கியிருக்கும் பொழுது நாகேஷ் முத்துராமனிடம் தன் திரைப்படத்திற்குப் பண உதவி செய்யும்படிக் கேட்கிறார். அப்பொழுது நாகேஷும் குமாரி சச்சுவும் கிராமபோனில் இசைக்கும் எல்.ஆர். ஈஸ்வரியும் ஏ.எல். ராகவனும் இணைந்து பாடிய "மலரென்ற முகமொன்று சிரிக்கட்டும், மனமென்ற கருவண்டு பறக்கட்டும்" எனும் பாடலுக்கு நடனமாட அதை முத்துராமன் ரசிக்கும் காட்சி மிகவும் அருமை.
இந்நிலையில் வி.எஸ். ராகவன் திடீரென்று சின்னமலைக்கருகில் ஏதோ எஸ்டேட் விலைக்கு வருவதாகக் கேள்விப்பட்டு சின்னமலை வருகிறார். எதேச்சையாக அவர் தன் பால்ய சிநேகிதரான பாலையாவை சந்திக்கிறார்.
அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று தன் பெண்களின் திருமணம் சம்பந்தமாகக் கூறும்பொழுது அவர் பெண் காஞ்சனாவைத் தன் மகனுக்குத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறார். கிழவன் வேஷத்திலிருக்கும் முத்துராமனை வி.எஸ். ராகவனுக்கு அறிமுகம் செய்கிறார் பாலையா. முத்துராமனின் கார் தனது கார் என்று கண்டுகொள்ளும் தந்தை வி.எஸ். ராகவனிடம் முத்துராமன் அக்காரைத் தான் ஒரு புரோக்கரிடம் விலை கொடுத்து வாங்கியதாகக் கூறி சமாளிக்கிறார்.
முத்துராமன், ரவிச்சந்திரன், காஞ்சனா, ராஜஸ்ரீ ஆகிய நால்வரும் ஒரு நாள் "பிக்னிக்" செல்கின்றனர். அப்பொழுது முத்துராமன், சீர்காழி கோவிந்தராஜன் பாடிய "காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை" என்ற பாடலைப் பாடிக் காஞ்சனாவைக் கலாட்டா செய்து, முடிவில் கிழவன் வேஷத்தைக் கலைத்துத் தான் அவரது காதலன் என்பதை வெளிப்படுத்துகிறார்.
இதற்கிடையில் சென்னை திரும்பும் வி.எஸ். ராகவன் ரவிச்சந்திரனைப் பற்றிய உண்மை தெரிந்து பாலையாவிடம் சொல்கிறார். பாலையா கோபமடைந்து போலீஸில் ரவிச்சந்திரன், முத்துராமன் இருவரின் மேலும் மோசடி செய்ததாகப் புகார் கொடுத்து விடுகிறார். இதன் விளைவாக, முத்துராமனையும் ரவிச்சந்திரனையும் போலீஸார் கைது செய்து லாக்கப்பில் வைக்கின்றனர். காஞ்சனாவின் மூலம் கிழவன் வேடமிட்டது தன் மகன் என்றறிந்த வி.எஸ். ராகவன் புகாரை வாபஸ் வாங்க ஏற்பாடு செய்கிறார்.
இந்நிலையில் சச்சுவின் தந்தை நாகேஷிடம், "படம் எடுக்கிறேன் படம் எடுக்கிறேன்னு என் பொண்ணைக் கூட்டிக்கிட்டு சுத்தினியே, என் பொண்ணை இது வரைக்கும் ஒரு ஃபோட்டோ எடுத்தியாய்யா?" என்று கேட்டு, இன்னும் ஒரு வாரத்திற்குள் படம் எடுக்க வேண்டும், இல்லையென்றால் சச்சுவைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த, நாகேஷின் யோசனைப்படி அவர் பாலையாவை வழி மறித்து, தன் பெண்ணுக்கு நாகேஷைக் கல்யாணம் செய்ய வற்புறுத்துகிறார். இறுதியில் மூன்று ஜோடிகளுக்கும் திருமணம் இனிதே நடக்கிறது.
இப்படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் ஏராளம். எல்லாவற்றையும் எடுத்துரைக்க வேண்டுமென்றால் படத்தின் கதை வசனம் அனைத்தையும் சொல்ல வேண்டும். அப்படி ஒரு பிணைப்பை இப்படத்தில் அபாரமாக அமைத்துள்ளார் இயக்குனர் ஸ்ரீதர்.
வழக்கமாக சீரியஸான ரோல்களில் நடிக்கும் முத்துராமன் இப்படத்தில் தன் நகைச்சுவை நடிப்பால் அசத்தியிருக்கும் விதத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. படத்தைப் பார்த்துத்தான் ரசிக்க இயலும். நாகேஷ் சச்சுவை ஒப்பந்தம் செய்யும் பொழுது சச்சு படத்தயாரிப்பு பற்றிக் கேட்கையில், "தயாரிப்பு, டைரக்ஷன் எல்லாமே நான் தான். எல்லாம் ரெடியாயிருக்கு. ஆனா அந்தக் கதை.." என்று சொல்லிவிட்டுத் தன் படத்திற்குக் கதையை மரங்களிடையே தேடுவது மிகவும் ஸ்வாரஸ்யமான விதத்தில் வெளிப்படுத்துகிறது.
நாகேஷ், பாலையா, காஞ்சனா, ராஜஸ்ரீ நால்வரும் டைனிங் டேபிளில் அமர்ந்து உணவருந்துகையில் நாகேஷ் ஏதோ யோசனையில், ச்..ச்..அய்யோய்யோயையோ.." என இழுக்க, பாலையா "ஏண்டா, வயித்து வலியா?" எனக்கேட்க, ராஜஸ்ரீ "ஏன் அண்ணா, படத்தைப் பத்தி ஏதாவது ப்ளானா?" எனக் கேட்க, "தேர் யூ ஆர், என் படத்தில ஒரு சின்ன சீன்; அப்பன் மகனை வீட்டை விட்டுத் துறத்தறார்" என, "ஆமா, இப்படியே நடந்துக்கிட்டிருந்தா உன் கதையில இல்லடா, நம்ம வீட்டுக்குள்ளே நடக்கத்தான் போகுது" என பாலையா கூற அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் நாகேஷ், "அப்போ வீட்டு வாசலில் வரும் நாய் அவனைப் பார்த்து ஒரு நிமிஷம் அழுதுட்டுப் போகுது, பத்து வருஷத்துக்கு முன்னாலே பிஸ்கட் போட்டிருக்கான். கேமராவில் நாயின் கண்ணைக் காட்டி அப்படியே வானத்தைக் காட்டறேன். சோன்னு மழை, உலகமே அந்தப் பையனுக்காகக் அழற மாதிரி" எனக்கூற காஞ்சனா கிண்டலாக,
"ஆஹா! இந்தச் சின்ன ஐடியாவுக்காகவே உன் படம் நூறு நாள் ஓடும்" என்று சொல்ல, பாலையா இடைமறித்து, "ஆ, ஓடும், ஓடும்.. ஒரே இடத்திலே நிக்கும்" என சொல்ல, நாகேஷ் "ஃபைனான்சியர், பணம் கொடுக்கற ஆளே இப்படிப் பேசினா எப்படி? நீங்க வேணும்னாப் பாருங்கப்பா, என் படம் ஓஹோ ஒஹோன்னு ஓடத்தான் போகுது, பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுது" எனக்கூற பாலையா, "ஆமாம், பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுது, நான் கோணிப்பையிலே கட்டோ கட்டுனு கட்டப் போறேன், போடா வேலை கெட்டவனே அறைஞ்சேன்னா"
என்பார்.
இரட்டைக்குரலில் பேசி அசத்துவதில் நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்கு நிகரானவர் பாலையா ஒருவரே. இந்த யுக்தியை இப்படத்திலும் பாலையா கையாண்டுள்ளார். ஒரு கல்யாணத் தரகர் அவர் மகளிருக்கு வரன் பார்ப்பதாகச் சொல்லி, "பையனுக்குப் படிப்பில்லேன்னாலும் பெரிய ரூபா எழுபது எம்பது ரூபா தேருமே" எனும்போது பாலையா அடித்தொண்டையில், "ஓஹோ, பையனுக்குப் படிப்பு வேற இல்லையா" பலே, பலே, அப்போ ஒண்ணு செய்யறியா?" எனக்கூறி விட்டுத் தன் இயல்பான குரலில். "நடையைக் கட்டுய்யா" என்பார்.
நாகேஷ் ரவிச்சந்திரனின் கூடாரத்திற்குச் சென்று "சார், நீங்க எங்கப்பாவுக்கெதிரா இந்தத் தொழிலாளி முதலாளி பிரச்சினையைப் பற்றிப் பேசினீங்களே, சம்திங் வொண்டர்ஃபுல்" எனப் பாராட்டி விட்டுத் தான் படம் எடுக்கப் போவதாகவும் அதற்குக் கதை தான் கிடைக்கவில்லை எனும் போது ரவிச்சந்திரன் ஒரு கதையை "வண்ண மலர் பூத்துக் குலுங்கும் சோலை" எனத்தொடங்க, "ஆஹா! ஆரம்பமே ரொம்ப நல்லா இருக்கு, அப்புறம்" என நாகேஷ் கேட்க, "அங்கே ஒரு கொடி இடையாள் வரா" என ரவிச்சந்திரன் கூற, "கொடியிடையாளா? என் கதாநாயகி அப்படி இல்லையே, சரி, பட்டினி போட்டு சரி பண்ணறேன், அப்புறம்" என்று கேட்க ரவிச்சந்திரன், "அவள் ஒரு நாட்டியக்காரியானதால் அவள் அன்னம் போல மெல்ல மெல்ல நடந்து வரா" எனக்கூற, "நாட்டியக்காரியா, சரிஆக்கறேன், அப்புறம்" என்பார். "அப்புறம் மன்மதன் போல ஒரு வாலிபன் அவ கிட்ட வந்து.." என ரவிச்சந்திரன் இழுக்க, "வந்து, வந்து.." என நாகேஷ் மிக்க ஆவலோடு மேலும் சொல்லக் கேட்க, "அப்புறம் கதை எப்படி எல்லாமோ போகுது.." மிச்சக் கதையை நாளக்கு சொல்றேன்" என்பார் ரவிச்சந்திரன். "கதையே அப்புறம் தான் போகுதா?" என்று கேட்டுவிட்டு நாகேஷ் ரவிச்சந்திரனுக்கு அட்வான்ஸ் தொகையாக ரூ 101 கொடுத்து விட்டுச் செல்கையில், "என்ன கதை? அன்ன நடை, கொடியிடையாள்.. பிச்சுபிட்டான் பிச்சி.." என்று பாராட்டிவிட்டுப் பின் சற்றும் திரும்பி வந்து ரவிச்சந்திரனிடம், "ஏன் சார், இந்தக் கதை மேலே யாரும் கேஸ் போட்டுற மாட்டாங்களே?" என்று கேட்பார். "மாட்டங்கன்னு நினைக்கிறேன் என ரவிச்சந்திரன் சொல்ல நாகேஷ் திரும்பிச் செல்வார்.
ஒரு சீனில் நாகேஷுக்கும் பாலையாவுக்கும் வாக்குவாதம் வர பாலையா, "டேய் உன்னைப் பெத்தேன் பாரு, என் புத்தியை செருப்பாலடிக்கணும், செருப்பாலடிக்கணும்" எனப் புலம்புவார். "உங்களுக்கு மகனாப் பொறந்தேனே, என் புத்தியை எதாலடிக்கிறதாம்?" என்று நாகேஷ் கேட்க, "நான் அடிச்ச செருப்பக் கீழே போடறேன், அதை எடுத்து நீ அடிச்சுக்கோ" என பாலையா கூற, "செருப்பாலடிபட்ட குடும்பம்னு ஊரே பேசும்பா" என்பார்.
இன்னொரு இடத்தில் பாலையா, "ஏண்டா என் மானத்த வாங்கறே?" என்று கேட்க, "வேறென்னத்த வாங்கறது? உங்க கிட்டருந்து பணத்தைத்தான் வாங்க முடியலையே" என்பார். பாலையா ஒரு சமயம் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டு நாகேஷை அழைத்து, "டேய் செல்லப்பா, என்னமோ சினிமா, கினிமான்னு சொல்றியே, அந்தக் கதையைக் கொஞ்சம் சொல்லேன் கேட்போம்" எனக் கூற, பல வினோதமான ஓசைகளுடன், "கும் இருட்டு.." எனத் தொடங்கி நாகேஷ் ஒரு மர்மக் கதையைச் சொல்ல அதைக்கேட்டு பாலையா பயந்து நடுங்கும் காட்சி நகைச்சுவையின் உச்சகட்டமாகும். இக்காட்சி படமாக்கப்படும் பொழுது அதைப் பார்க்க அங்கு வந்திருந்த ஹிந்தி நடிகர் ராஜேந்திரகுமார் அசந்துபோய் இருவரையும் மனதாரப் பாராட்டியதாக நாகேஷ் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார்.
டைரக்டர் ஸ்ரீதர் இப்படத்தை ஹிந்தியிலும் தயாரித்தார். அதில் ராஜேந்திரகுமார், மெஹ்மூத் மற்றும் பலர் நடித்துள்ளனர். வாழ்க்கையின் அன்றாடப் பிரச்சினைகளை மறந்து மனம் விட்டு சி¡¢க்கவும், சிறிதும் விரசமின்றி இனிய பாடல்களுடன் மனதைத் தொடும் காதல் காட்சிகளையும் கண்டு களிக்க வேண்டுமானால் இப்படத்தை அவசியம் பார்க்க வேண்டும்.
தமிழ்த்திரை விருந்து
Tuesday, July 26, 2011
Wednesday, July 20, 2011
பாசமலர்
"அன்பு மலர் ஆசை மலர் இன்ப மலர் நடுவே அருளோடு மலர்வது தான் பாச மலரம்மா" என்ற பாடல் வரிகள் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின் கணீரென்ற குரலில் ஒலிக்க ஆரம்பிக்கிறது, ஏ.பீம்சிங் இயக்கத்தில் மெல்லிசை மன்னரின் இசையுடன் கலந்து உருவாகி 1961ஆம் ஆண்டு வெளிவந்த தனது தங்கைக்காவே வாழ்ந்த ஒரு அண்ணனின் கதையான பாசமலர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி, காதல் மன்னன் ஜெமினி கணேசன், டணால் தங்கவேலு, எம். சரோஜா, எம்.என். நம்பியார், எம்.என். ராஜம், பி.எஸ்.ஞானம், பக்கோடா காதர் மற்றும் பலர் இப்படத்தில் திறம்பட நடித்துள்ளனர்.
தாய் தந்தையரை இளம் வயதிலேயே இழந்த ராஜூ (சிவாஜி கணேசன்) சிறு வயது முதலே தன் தங்கையை (சாவித்திரி) தாயாகவும் தந்தையாகவும் இருந்து வளர்க்கிறான்.
இருவரும் வாலிப வயதை அடைந்த நிலையில் ஒரு காட்சியில் சாவித்திரி உறங்குவதைப் பார்க்கும் சிவாஜி தன் தங்கையின் சீரான வாழ்வு பற்றி மனதில் எண்ணிப் பாடும், "மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்" என்ற பாடல் தமிழ் மக்களின் மனதைத் தொடும் வண்ணமாக அமைந்துள்ளது.
சிவாஜி ஓரே புன்னகையில் தங்கை மேல் அண்ணன் கொள்ளும் பாசத்தின் மகிமையை இப்பாடல் காட்சியில் உணர்த்தி விடுகிறார். தொழில்நுட்பம் மிகவும் முன்னேறாத அக்காலத்திலேயே கருப்பு வெள்ளையிலும் இக்கனவுக் காட்சி மிக அற்புதமாக, பார்ப்பவர் வியக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
ராஜூவுடன் ஒரு தொழிற்சாலையில் சக தொழிலாளியாக வரும் ஆனந்தன் (ஜெமினி கணேசன்) சாவித்திரி மேல் காதல் கொள்கிறார். பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலாவுடன் இணைந்து பாடிய "யார் யார் யார் அவள் யாரோ, ஊர் பேர் தான் தொ¢யாதோ" என்ற இனிமையான பாடலுடன் அவர்களது காதல் காட்சி இடம் பெறுகிறது.
ஜெமினி தன் அத்தை (பி.எஸ்.ஞானம்), மற்றும் அத்தை மகன் (தங்கவேலு) ஆகியோருடன் வசிக்கிறார். ஒரு சமயம் தொழிற்சாலையில் ஸ்டிரைக் ஏற்பட்டு தொழிலாளர்கள் அனைவரும் வேலை இழக்கும் நிலை ஏற்படுகிறது. ஜெமினி கணேசன் வெளியூர் சென்று விடுகிறார்.
சாவித்திரி தன் அண்ணன் தனக்குக் கொடுக்கும் பணத்தில் சிறிது சிறிதாக சேமித்தும், அருகிலுள்ள ஒரு பொம்மை தயாரிக்கும் நிறுவனத்தின் பொம்மைகளுக்கு வர்ணம் பூசும் வேலை செய்தும் சேர்த்த தொகை ஆயிரம் ரூபாயில் இருவரும் சேர்ந்து தனியாக பொம்மை தயாரிக்கும் தொழிலைத் தொடங்குகின்றனர். தங்கை தனக்குத் தரியாமல் வேலைக்குச் சென்றதற்காகக் கோபம் கொள்ளும் சிவாஜி அவள் ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்திருப்பதை அறிந்ததும் "ஆயிரம் ரூபாயா?" என்று வாயைப் பிளக்கும் காட்சி சபாஷ்.
தங்கை சேர்த்த ஆயிரம் ரூபாயில் பொம்மை செய்யும் தொழிலை மும்முரமாக இருவரும் செய்வதாக அமையும், "எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே" என்ற இனிமையான பாடல் வரிகள் நம் அனைவருக்குமே வாழ்க்கையில் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதை விளக்கி நம்பிக்கையூட்டுவதாகவும் பிறருக்கு உதவும் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும்
அமைட்ந்துள்ளது.
பொம்மை வியாபாரத்தில் வெற்றி பெற்ற சிவாஜியிடம் அவரது முன்னாள் தொழிற்சாலை முதலாளி தனது தொழிற்சாலையை விற்கிறார். வெளியூரிலிருந்து வேலை கிடைக்காமல் திரும்பி வரும் ஜெமினி தங்கவேலுவிடம் சிவாஜியைப் பற்றி விசாரிக்க, தங்கவேலு கூறுகிறார், "ராஜுவா? மச்சான், இப்போ அவர் ராஜசேகர், பெரிய ஆளு. கோட்டும் சூட்டும் மாட்டிகிட்டு, கையில் சிகரெட்டுடன் டக், டக்குனு நடந்து வந்து, ஓரக்கண்ணால பாத்து ஹலோ ஹௌ டு யு டூன்னான், நான் ஆளைவிடுன்னு வந்துட்டேன்" என்பார்.
ஜெமினி சிவாஜியின் தொழிற்சாலையில் தனக்கு ஒரு வேலையை வற்புறுத்திப் பெறுகிறார். சிவாஜி கணேசனின் நண்பர் ஒருவர் எம்.என். நம்பியாரை சாவித்திரிக்கும் அவரது சகோதரி எம்.என். ராஜம் அவர்களை சிவாஜிக்கும் திருமணம் முடிக்க ஏற்பாடு செய்கிறார். இரு சகோதர சகோதரிகளையும் பரஸ்பரம் அறிமுகம் செய்யும் காட்சியில் எம்.என். ராஜம் தன் தோழியருடன் ஆடிப்பாட, அதற்கு சிவாஜி பியானோ வாசிக்க இசைக்கும் "பாட்டொன்று கேட்டேன், பரவசமானேன், நானதைப் பாடவில்லை" என்ற பாடலுக்குத் தானே பியானோ வாசித்த எம்.எஸ். விஸ்வநாதன் சிவாஜியின் பியானோ வாசிக்கும் தோரணையை மிகவும் அருமை என்று பாராட்டியுள்ளார்.
தன் தங்கையின் காதலை அறியவரும் சிவாஜி கோபம் கொண்டு ஜெமினியை அடித்து விடுவதோடு அவரையும் மற்றும் சில தொழிலாளர்களையும் பணி நீக்கம் செய்து விடுகிறார். ஜெமினி பிற தொழிலாளர்களுடன் சேர்ந்து கொண்டு ஸ்டிரைக் செய்ய, அவரை உள்ளே அழைத்துப் பேசும் சிவாஜி, "காட்டிலே குழி பறிப்பது காட்டு யானைகளின் ஓய்வுக்காகவா? வில்லிலே நாணை ஏற்றி அம்பைப் பூட்டுவது புள்ளி மான்களுக்கு விளையாட்டுக் காட்டவா? இல்லை. இதுவெல்லாம் பிறர் துன்பத்திலே இன்பம் காண வேண்டும் என்ற வெறி, ஆனந்தா, நீ உன் ஆட்களுடன் சேர்ந்து கொண்டு இத்தொழிற்சாலையில் எரியும் மின்விளக்குகளையெல்லாம் அணைத்துவிட்டாலும், சின்னன்சிறு அகல் விளக்கின் ஒளியில் ஒரே ஒரு தொழிலாளி மட்டும் ஓடியாடி வேலை செய்துகொண்டிருப்பான். அது தான் இந்த ராஜூ, நவ் கெட் அவுட்" என்று பேசும் வசனம் அனைவரையும் கவர்ந்த ஒன்றாகும்.
சாவித்திரிக்குத் திருமணம் நிச்சயம் செய்யும் தருணத்தில் வீட்டின் கொல்லைப்புரத்தில் ஜெமினி சாவித்திரியை சந்தித்துப் பேசுவார். அப்போது அவர், "நான் வேண்டுமென்றால் இப்பொழுதே என்னுடன் வந்துவிடு, உன் அண்ணன் தான் வேண்டுமென்றால் என்னை மறந்து விடு" என்று கூற சாவித்திரி, "வெறும் ஸ்பரிச உணர்ச்சியில் பிறந்த உங்கள் காதலை விட என் அண்ணன் என் மேல் கொண்டுள்ள பாசம் பெரியது. அவரை விட்டு என்னால் எங்கும் வர முடியாது. என்னை மறந்து விடுங்கள்" என்று கூறுவதைத் தற்செயலாக அங்கு வரும் சிவாஜி கேட்டு, தன் மேல் இவ்வளவு பாசம் கொண்டுள்ள தங்கையின் காதலை நிறைவேற்ற முடிவு செய்து ஜெமினி, சாவித்திரி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.
திருமணத்தில், "ஆனந்தா, என் கண்ணையே உன் கிட்ட ஒப்படைக்கறேன். அதில் எப்போதும் ஆனந்தக் கண்ணீர்தான் வர வேண்டும்" என்று வேண்ட, "அது என் கடமை ராஜூ" என்று ஜெமினி கூற, அதைத் தொடர்ந்து எல்.ஆர். ஈஸ்வரி குழுவினரின் குரலில் ஒலிக்கும், "வாராய் என் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ, மணமேடை தன்னில் மனமே காணும் திருநாளைக் காண வாராயோ" எனும் பாடல் எத்துணை முறை கேட்டாலும் சலிக்காது.
அதன்பின் தன்னால் தடைபட்ட தன் அண்ணனின் திருமணத்தை முயற்சி செய்து முடித்து வைக்கிறார் சாவித்திரி. சிவாஜி, எம்.என். ராஜம் இருவரது முதலிரவுக் காட்சிக்கு அறைக்கு வெளியில் இருந்து கொண்டு ஜெமினி சிதார் வாசிக்க சாவித்திரி பாடும், "மயங்குகிறாள் ஒரு மாது, தன் மனதுக்கும் செயலுக்கும் உறவும் இல்லாது" என்ர பாடல் கேட்கக் கேட்கத் தெவிட்டாத இசையமுதாகும். தங்கையின் திருமணம் முடிந்ததும் ஜெமினியும், சாவித்திரியும் தன்னுடனேயே ஒரே வீட்டில் இருக்கும்படி சிவாஜி மன்றாடிக் கேட்க, அதன்படி அவர்களுடன் தங்கவேலுவும், அவரது தாயாரும் சேர்ந்து விட, மாமியார் கொடுமை சாவித்திரிக்கு ஆரம்பமாகிறது. மெட்டி ஒலி மாமியாரெல்லாம் இந்த மாமியாரிடம் பிச்சை வாங்க வேண்டும், அப்படி ஒரு போடு போட்டிருக்கிறார் பி.எஸ். ஞானம்.
எம். சரோஜாவின் மேல் காதல் வயப்படும் தங்கவேலு சரோஜாவின் வீட்டு நாய்க்குட்டியைத் திருடி, ஒரு சாக்குப்பையில் கட்டிக்கொண்டு பேருந்தில் வரும் வழியில் வேறொருவர் டிக்கட் காசை மிச்சப்படுத்த வேண்டித் தன் மகனை ஒரு சாக்குப்பையில் கட்டிக்கொண்டு வர, சாக்குப்பைகள் இடம் மாறி வீட்டுக்கு வந்து சாக்குப்பையைப் பிரிக்கும் தங்கவேலு மொட்டைத்தலையுடன் சாக்குப்பையிலிருந்து வெளிவரும் சிறுவனைக்கண்டு அதிர்ச்சியுற, அதே சமயம் சரோஜாவின் தந்தை போலீசுடன் வர, சாக்குப்பை இடம் மாறிய பையனின் தந்தையும் அங்கு வர ஒரே கலாட்டா. தங்கவேலுவை சிவாஜி கண்டிக்க, ஜெமினி கோபித்துக்கொண்டு தான் வெளியே செல்வதாகக் கூற சிவாஜி தன் தங்கைக்காக விட்டுக் கொடுத்துத் தன் மனைவியுடன் வெளியேறி வேறு வீட்டில் சென்று தங்குகிறார்.
இத்தருணத்தில் அமைகிறது சிவாஜியும் சாவித்திரியும் வெவ்வேறு வீடுகளில் தங்கள் குழந்தைகளைத் தாலட்டும் பாடலான, "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே - வந்து விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக விளைந்த கலையன்னமே, நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே - வளர்ப் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே" என்ற கவிஞர் கண்ணதாசனின் கற்பனை வளத்திற்குச் சிகரமாய் அமைந்த பாடல்.
மாமியார் கொடுமை எல்லை மீறி, சாவித்திரியை ஏமாற்றி அவரிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி, தங்கவேலுவின் உதவியுடன் சொத்து கேட்டு வழக்குப் போட, தன் சொத்தையெல்லாம் தங்கையின் பெயருக்கே எழுதிக் கொடுத்து விடுகிறார் சிவாஜி.
எம்.என். ராஜம் வெளி நாட்டில் தன் டாக்டர் படிப்பைத்தொடர வாய்ப்பு வரவே, அவரை விமானத்தில் வழியனுப்பிவிட்டுத் தன் ஒரே மகனுடன் மன நிம்மதி தேடித் தீர்த்தயாத்திரை செல்கிறார் சிவாஜி. யாத்திரை முடிந்து மன நிம்மதி கிட்டாமல் நலிந்த உடலுடன் திரும்பும் சிவாஜி தங்கையைப் பார்க்க அவரது வீட்டுக்குச் செல்கையில் மாமியார் அவரை உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிடுகிறார்.
இந்நிலையில் சிவாஜி கண்பார்வையை இழக்க நேரிடுகிறது. அண்ணன் தன்னைக் காணவந்ததை மாமியார் வாயிலாகக் கேட்டறிந்த சாவித்திரி மாமியாரைக் கடிந்துகொண்டு அண்ணனைக் காணச்செல்கையில், தன் மகனுக்குத் தன் தங்கையின் மகளை மணம் முடிக்க விருப்பம் தெரிவித்து, பேரக்குழந்தைகளுடன், "கை வீசம்மா, கை வீசு.." என்று கொஞ்ச விரும்புவதாகக் கூறிப்பின், "எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்" என்ற பாடல் வரிகளை உணர்ச்சி மிகுந்த குரலில் உச்சரித்துக் கொண்டே தங்கையின் மகளைக் கையில் வைத்துக்கொண்டு ஆடிப்பாடும் சிவாஜி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிர்விடுகிறார்.
"அண்ணா, அண்ணா" என்று கதறி சாவித்திரியும் அண்ணன் மேல் விழுந்து உயிர்நீக்க, "தங்கை உயிர் நினைத்து தன்னுயிரை வைத்திருந்தான், அண்ணன் வளர்த்த உயிர் அவனுடனே சென்றதம்மா" என்ற பல்லவியுடன் ஆரம்பித்து டி.எம். சௌந்தரராஜன் குரலில் சோகரசத்துடன், "மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழவைத்தான் என்று அமைதி கொண்டாள்" என்ற பாடல் ஒலிக்க அண்ணன் தங்கை இருவரின் ஆவி உடல்களும் மேலுலகம் செல்வது போன்ற காட்சியைக் குழந்தைகள் இருவரும் காண்பதாக நிறைவு பெறுகிறது பாசமலர்.
இந்த இறுதிக் காட்சி ரசிகர்களின் மனத்தைத்தொடுவதாய் அமைந்துள்ளது. நடிப்புத்துறைக்குப் பல்கலைக் கழகமாய் விளங்கிய நடிகர் திலகம் இத்திரைப்படத்தில் வழங்கியுள்ள பாடங்கள் ஏராளம்.

Monday, March 14, 2011
வீரபாண்டிய கட்டபொம்மன்
அழகிய வீரபாண்டியபுரம் (இன்றைய ஒட்டப்பிடாரம்) என்ற நகரை ஆண்டு வந்த ஜெகவீரபாண்டியன் என்ற மன்னனுக்கு பொம்மு என்ற ஒரு அமைச்சர் இருந்தார். இவர் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர். அவர் தெலுங்கில் கெட்டிபொம்மு என்றழைக்கப்பட்டார். கெட்டிபொம்மு எனும் பெயர் நாளடைவில் கட்டபொம்மன் என்று மாறி அவர் ஆதி கட்டபொம்மன் என்றழைக்கப்பட்டார்.
ஜெகவீரபாண்டியன் வாரிசில்லாமல் இறக்கவே ஆதி கட்டபொம்மன் மன்னனானார். இவரே திருநெல்வேலியிலிருந்து வடகிழக்கில் 18 கிலோமீட்டர் தொலைவில் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைக் கட்டினார். ஆதி கட்டபொம்மனின் பரம்பரையில் வந்த ஜெகவீர கட்டபொம்மனுக்கும் அவரது மனைவி ஆறுமுகத்தம்மைக்கும் கி.பி. 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி கருத்தையா என்றழைக்கப்பட்ட வீரபாண்டியன் பிறந்தான். சிவத்தையா என்றழைக்கப்பட்ட தாளவாய் குமாரசாமி மற்றும் ஊமைத்துரை என்றழைக்கப்பட்ட துரைசிங்கம் ஆகியோர் அவனது தம்பிகளாவர்.
வீரபாண்டியன் பாஞ்சாலங்குறிச்சியின் 47வது மன்னனாக 1790ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி முடிசூட்டப்பட்டுப் பின்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றழைக்கப்பட்டான். வெள்ளையர்களை எதிர்த்து கி.பி. 1798 முதல் கி.பி. 1801 வரை பாஞ்சாலங்குறிச்சி போரிட்டது. இதுவே பின்னர் 1857ஆம் ஆண்டு நடந்த இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் உருவானதற்குத் தூண்டுகோலாக அமைந்தது.
இத்தகைய புகழ்பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் கதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனைக் கதாநாயகனாகக் கொண்டு பி.ஆர். பந்துலு அவர்களின் இயக்கத்தில் 1959ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது. 1960ஆம் ஆண்டு கெய்ரோவில் நடந்த ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் இப்படம் சிவாஜி கணேசன் அவர்களுக்குத் தலைசிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுத்தந்தது.
கட்டபொம்மனாக சிவாஜி கணேசன், ஊமைத்துரையாக ஓ.ஏ.கே. தேவர், கட்டபொம்மனின் மனைவி ஜெக்கம்மாவாகப் புகழ்பெற்ற பாடகி எஸ். வரலக்ஷ்மி, கட்டபொம்மனின் தளபதி வெள்ளையத் தேவனாகக் காதல் மன்னன் ஜெமினி கணேசன், அவரது காதலி வெள்ளையம்மாவாக நாட்டியப் பேரொளி பத்மினி, கட்டபொம்மனின் ஒற்றனாக பிரபல நகைச்சுவை நடிகர் கூஜா கருணாநிதி, வெள்ளையரின் ஒற்றனாகக் குலதெய்வம் ராஜகோபால், கட்டபொம்மனை வெள்ளையரிடம் காட்டிக் கொடுத்த எட்டப்பனாக பிரபல நகைச்சுவை நடிகர் வி.கே. ராமசாமி, வெள்ளைக்காரத் துரை பானர்மேனாக ஜாவர் சீதாராமன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஜி. ராமநாதன் இசையமைப்பில் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ். வரலக்ஷ்மி, பி. சுசீலா, ஜமுனாராணி, டி.வி. ரத்னம், ஏ.பி. கோமளா, சுந்தரம் ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர்.
"கறந்த பாலையும் காகம் குடியாது கட்டபொம்மு துரை பேரு சொன்னா" என்ற வரிகளுடன் கட்டபொம்மனின் புகழினை எடுத்துரைக்கும் கோரஸ் பாடல், தன் நாட்டில் கொள்ளையர்கள் மக்களைக் கொள்ளையடிப்பதைக் கேட்டு அவர்களைப் பிடிக்க கூஜா கருணாநிதியுடன் மாறுவேடமணிந்து சிவாஜி கணேசன் மாட்டு வண்டியில் சென்றுகொண்டே பாடும், "மாட்டு வண்டி பூட்டிகிட்டு, மாப்பிள்ளையைக் கூட்டிக் கிட்டு" எனும் பாடல், பேபி காஞ்சனா நடனமாட அதற்கு எஸ். வரலக்ஷ்மி பாடும், "சிங்காரக்கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி" என்ற பாடல், ஜெக்கம்மாவும் வெள்ளையம்மாவும் பிற பெண்களுடன் சேர்ந்து பாடும், "டக்கு டக்கு டக்குனு அடிக்கடி துடிக்கும்" என்ற விடுகதைப் பாடல், அதை மறைந்திருந்து வேடிக்கை பார்க்கும் கட்டபொம்மனும் ஊமைத்துரையும் அவர்களிடம் மாட்டிக் கொண்டு அவதிப்படும் காட்சி, கூஜா கருணாநிதியும் குலதெய்வம் ராஜகோபாலும் தங்கள் காதலியருடன் பாடும் "ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி, ஆசையாகத் தண்ணி மொண்டு" என்ற பாடல், பத்மினி தன் தோழியருடன் சேர்ந்து வெள்ளையம்மாவின் காளையைப் பற்றிப் பாடும் "அஞ்சாத சிங்கம் என் காளை, இது பஞ்சாப் பறக்க விடும் ஆளை" என்ற பாடல், ஜெமினி கணேசனும் பத்மினியும் பாடும் காதல் ரசம் நிறைந்த "இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே" எனும் பாடல், அப்பாடல் முடிவில் அவ்விருவரையும் பாம்பு ஒன்று தீண்ட வர, அப்பாம்பை அப்பொழுது அங்கு வரும் சிவாஜி கணேசன் தன் வாளால் வெட்டும் காட்சி, முருகன் கோவிலில் தன் மனைவியுடனும் சுற்றத்தாருடனும் வழிபடும் கட்டபொம்மன் பாடும் "வெற்றி வடிவேலனே, சக்தியுமை பாலனே, வீரம் விளைத்த குகனே" எனும் பாடல், வெள்ளையத் தேவன் போருக்குப் புறப்படுகையில் வெள்ளையம்மா அவனைப் போருக்குப் போக வேண்டாம் என்று கெஞ்சும் "போகாதே போகாதே என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்" எனும் பாடல், வெள்ளையருடன் போரிட்டு வெள்ளையத் தேவன் மடிந்ததும் ஒலிக்கும் "ஜெக்கம்மா, வேறில்லை திக்கம்மா" எனும் பாடல் ஆகியவை எத்துணை முறை பார்த்தாலும் கேட்டாலும் இனிப்பவை.
ராமலிங்க விலாசம் எனும் மாளிகையில் வெள்ளைக்காரக் கலெக்டர் ஜாக்சன் துரையை கட்டபொம்மன் சந்திக்கும் காட்சியும், அப்பொழுது அவர்கள் பேசும் வசனங்களும் மிகவும் சுவையானவை.
ஜாக்ஸன்: நீர் தான் வீரபாண்டியக் கட்டபொம்மனோ?
கட்டபொம்மன்: நீர் தான் ஜாக்ஸன் துரை என்பவரோ?
ஜாக்ஸன்: ஏது, வெகுதூரம் வந்து விட்டீர்?
கட்டபொம்மன்: நட்புறவு நாடியதாக அறிந்தேன், அதை விரும்பியே நானும் வந்தேன்.
ஜாக்சன்: நட்பு வேண்டும், ஆனால் அதற்கேற்ற நடத்தையில்லை உன்னிடம்.
கட்டபொம்மன்: கற்றுக்கொடுக்கும் இனம் தமிழினம், நீர் கற்றுக்கொடுக்க முயற்சிப்பது அறிவீனம்.
ஜாக்சன்: இறுமாப்பு இன்னும் அடங்கவில்லை
கட்டபொம்மன்: அது என் உடன் பிறந்தது, அடங்காது, உரக்க உரக்க மேலெழும்.
ஜாக்ஸன்: உன் மீது குற்றம் சுமத்துகிறேன்
கட்டபொம்மன்: என்னவென்று?
ஜாக்ஸன்: எடுத்துரைத்தால் கணக்கிலடங்காது
கட்டபொம்மன்: எண்ணிக்கை தெரியாத குற்றம்
ஜாக்ஸன்: எனக்கா எண்ணிக்கை தெரியாது, அகம் பிடித்தவனே, கூறுகிறேன் கேள், உன் நிலத்தில் விளையும் விளைச்சலுக்குக் கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்குக் கீழரசாக இருக்கத் திரைப்பணம் செலுத்தவில்லை, நெடுநாளாக வரிப்பணம் வந்து சேரவில்லை, இந்தப் பாக்கிக்கெல்லாம் இன்னும் வட்டியும் கூடக் கட்டவில்லை.
கட்டபொம்மன்: கிஸ்தி, திரை, வரி, வட்டி, வேடிக்கை! வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக்கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழனி வாழ் உழவருக்குக் கஞ்சிக்கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே, யாரைக் கேட்கிறாய் வரி? எதற்குக் கேட்கிறாய் திரை? போரடித்து நெற்குவிக்கும் மேலைநாட்டுழவர் கூட்டம் பரங்கியர் உடல்களையும் போரடித்து, தலைகளை நெற்கதிர்களாகக் குவித்து விடும் ஜாக்கிரதை.
இந்த வசனங்களைக் கேட்டு, திரும்பப் பேசி மகிழாத தமிழர்கள் அனேகமாக இல்லை. இன்றும் பல குழந்தைகள் இவ்வசனத்தைப் பேசிக்காட்டி, பெரியவர்களின் பாராட்டைப் பெறுவதில் இன்பம் காண்கின்றனர்.
போரில் தோல்வியுற்றபின் ஊமைத்துரையும் மற்றவர்களும் தப்பி ஓடிய நிலையில் வெள்ளைக்கார துரை பானர்மேன் முன்னிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் விசாரிக்கப்படும் போது வரும் வசனங்களும் குறிப்பிடத்தக்கவை.
பானர்மேன்: இரும்புத்தலையன் என்று எனக்குப் பெயர். என்னிடமே இறுமாப்பா?
கட்டபொம்மன்: உருக்க வேண்டிய பொருள், அதனிடம் இரக்கம் காட்டிப் பேசியது தவறுதான்.
பானர்மேன்: எரிக்கும் சூரியன் இருக்கிறதே, அது கூட எங்களைக் கேட்டுத்தான் எழும், விழும்.
கட்டபொம்மன்: அந்தக் கதையெல்லாம் இங்கு விடாதே அப்பனே. சூரியனே வேண்டாமென்று ஒரு ஆண் கூட அல்ல, ஒரு பெண் கூறிய கதை இங்கு ஏராளமாக உள்ளது, வேறு ஏதேனுமிருந்தால் கூறு
பானர்மேன்: ஏனைய பாளையக்காரர்கள் எல்லாரும் பணிந்து விட்டார்கள், பலனடைகிறார்கள், நீ ஒருவன் மட்டும் பணியாதது உனக்கு ஒரு லாபமா?
கட்டபொம்மன்: ஏனைய பாளையக்காரர்கள் எல்லோரும் பணிந்து நான் ஒருவன் பணியாதது உனக்கு ஒரு நஷ்டமா?
பானர்மேன்: இவன் பேசத்தெரிந்தவன்
கட்டபொம்மன்: ஆம், பேசத்தெரிந்தவன், வெறும் பேச்சு மட்டுமல்ல, வல்லவன், வாள் வீசத் தெரிந்தவன், காதல், மானம் என்ற கட்டுக்கோப்பில் வளர்ந்தவன்
பானர்மேன்: நீ இதுவரை செய்த குற்றங்களுக்கு சமாதானம் ஏதும் கூறாமல் மேலும் மேலும் குற்றங்களை வளர்த்துக்கொண்டே போகிறாய். இது நல்லதல்ல. இறுதியாக உனக்கு ஒரு வாய்ப்பளிக்கிறேன், மன்னிப்புக் கேட்டுக் கொள்.
கட்டபொம்மன்: என்ன சொன்னாய்? மன்னிப்பா? என் தாய் கேட்டிருக்க வேண்டுமிதை. தள்ளாத வயதிலும் பொல்லாத புலியெனப் பாய்ந்திருப்பாள். என் தம்பி கேட்டிருக்க வேண்டுமிதை, இந்நேரம் உன் பரங்கித்தலை உன் சீதளச் சீமையை நோக்கிப் பறந்திருக்கும். என் தமிழ்ப் புலவன் இதைக் கேட்டிருக்க வேண்டும், அறம் பாடியே உன்னை அழித்திருப்பான். ஆனால் இங்கோ, நாய்களும், நரிகளும், நயவஞ்சகப் பூனைகளும் நிரம்பி இருக்கின்றன.
பானர்மேன்: என்ன? எங்களை நாய் என்றா சொன்னாய்?
எட்டப்பன்: துரையவர்களே, நாய் ஒன்று தான் நன்றியுள்ள பிராணி, அதைத்தான் கூறுகிறான் இவன்.
பானர்மேன்: அதைச்சொல்ல இவன் யார்?
எட்டப்பன்: அது தானே, அடக்கியாளும் உங்களைச் சொல்ல அடிபட்ட இவனுக்கு என்ன அருகதை இருக்கிறது.
கட்டபொம்மன்: அடே எட்டப்பா, வாழ நினைத்தாய், வல்லவனை அழித்தாய், இனி நீ வாழ்ந்து கொள். ஆனால் அன்னியன் உன்னைப் போற்ற வேண்டும், அது உனக்கு இனிக்க வேண்டும் என்று மட்டும் எண்ணாதே. நானும் நீயும் ஒரே மண்ணில் பிறந்தவர்கள். ஆனால் இவனோ, நேற்று வந்தான், இன்றிருப்பான், நாளை போவான் என்ற எல்லை இலக்கணத்துக்குட்பட்டவன். உனக்கும், என்னோடு சிங்கங்களாய்ப் பிறந்து இன்று குரங்குகளாய்க் கூனிக் குறுகி நிற்கும் மானங்கெட்ட மடையர்களுக்கும் கூறுகிறேன். கூறுவதென்ன சீ, காரி உமிழ்கிறேன் தூ.
பானர்மேன்: போதும் நிறுத்து, யாரங்கே இவனை இங்கிருக்கும் புளியமரத்தில் தூக்கிலிடுங்கள்.
கட்டபொம்மன்: துணிந்தவனுக்குத் தூக்கு மேடை பஞ்சு மெத்தை. தம்பி, அஞ்சாத சிங்கமே, இந்தக் கடைசி நேரத்தில் உன்னைக் காணத்துடிக்கிறேன்.
இந்த வசனங்களும் மிகவும் பிரபலமானவை. இன்றும் கட்டபொம்மன் என்றால் நமக்கு நினைவில் வருவது சிவாஜி அவர்களின் உருவமே. பாத்திரத்திற்கு உயிர்கொடுக்கும் அந்த அதீதக் கலைஞனுக்கு இறைவன் சாகாவரம் அளித்திருக்கக் கூடாதா?

Subscribe to:
Comments (Atom)